இன்று 20.04.2025 அன்று Radisson Hotel-லில் வாசவி கிளப் இன்டர்நேஷனல் District V501A னின் வாட்ஸ்அப் சேனல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் Vn. Golden*KCGF A.வெங்கடேஸ்வர குப்தா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக Vn. Vidya Sankalp Sreyobhilashi சுஜாதா ரமேஷ் பாபு, இன்டர்நேஷனல் பொருளாளர் அவர்கள் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினராக Vn. Silver*KCGF V.J. பத்ரிநாராயணன், சர்வதேச இணைச் செயலாளர் மற்றும் Vn. Golden*KCGF S. சத்தியநாராயணன், சர்வதேச இயக்குனர் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியாளர் டாக்டர் G. செந்தில்குமார் (எக்ஸிகியூட்டிவ் லைஃப் கோச்), டிஜிட்டல் பார்ட்னராக Yellow Edusoft நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO, Er. T. மோகன்குமார் மற்றும் அமைச்சரவை குழு, மண்டலத் தலைவர்கள், மண்டலச் செயலாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.